டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு எதிரான மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த அமைப்புகளுடன் மத்திய அரசு பல முறை பேச்சுவார்த்தை நடத்தியது.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது.இதற்கு முன்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது .விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உச்சநீதி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் 4 பேர் இடம்பிடித்தனர்.ஆனால் விவசாயிகள் குழுவில் அமைக்கப்பட்டவர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்றும் இந்த குழுவை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தனர்.மேலும் விவசாயிகள்,ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர்களில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் குடியரசு தினத்தன்று டெல்லிக்கு நுழையும் விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்தக்கோரி மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட இடைக்கால மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.மேலும் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்த்துறை இருக்கிறது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…