கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் நடிகை ரியா, அவரது சகோதரருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, சுஷாந்த் சிங் உதவியாளர் சாமுவேல் மிரண்டாவிற்கு கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ரியா தம்பி சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா வீடுகளில் சோதனை நடைபெற்ற பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் வருகின்ற 9 -ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் காலை ரியா வீட்டிற்கு சென்று நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கினர்.
பின்னர், மதியம் 12 மணியளவில் ரியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் 6 மணி விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, ரியா வீட்டிற்கு சென்றார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் சூழ்ந்த பத்திரிகையாளர்கள் ரியாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தனக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. சுஷாந்த் சிங் பயன்படுத்தி வந்தார் என கூறினார்.
இந்நிலையில், இன்று ரியா மீண்டும் ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு சமன் அனுப்பி உள்ளது.
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…