சுஷாந்தின் உடல் மருத்துவமனைக்கு வந்தபோது கால் உடைந்து இருந்ததாக மருத்துவமனை ஊழியர் கூறியுள்ளார்.
தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 -ஆம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் உயிரிழந்த வழக்கை தற்பொழுது சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் போதைப்பொருள் உபயோகித்தும், அவை தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.அவரது பதிவில், ‘இதுபோன்ற செய்திகளைக் கேட்பது என் இதயத்தை மில்லியன் முறை உடைக்கிறது. அவர்கள் என் சகோதரனை என்ன செய்தார்கள். தயவுசெய்து அவர்களைக் கைது செய்யுங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்ட வீடியோவில், ‘ அதில் கூப்பர் மருத்துவமனையின் ஊழியர் என கூறும் ஒருவர் , சுஷாந்தின் உடல் மருத்துவமனைக்கு வந்தபோது கால் உடைந்து இருந்ததாக கூறியுள்ளார். இறந்த உடலை பரிசோதித்த மருத்துவர்கள் கூட இது ஒரு தெளிவான கொலை, தற்கொலை அல்ல என்று கூறியதாகவும், ஆனால் இது ஒரு தற்கொலை வழக்கு என்று போலீசார் அறிவித்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…