இந்திய பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடும் வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஆண்டு முழுவதும் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த தினம் நாத்துவா கா திபா எனுமிடத்தில், பாகிஸ்தான் சிறப்பு சேவை பிரிவைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் தாக்குதலை நடத்தினர், அதில் ராக்கெட் லாஞ்சர், பீரங்கி குண்டுகளை வீசியும் தாக்குதல் செய்தனர். இதனிடையே இந்திய வீரர்கள் சற்றும் யோசிக்காமல் பதிலடி கொடுத்ததால் பாக்கிஸ்தான் சிறப்பு சேவை பிரிவை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் தாக்குதலிலிருந்து பின்வாங்கினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் இருவரை இந்திய வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட 21 வயது இளம் ராணுவவீரர் சுக்வீந்தர் சிங் வீரமரணம் அடைந்தார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…