Tamilisai Soundararajan [Image Source : Twitter/@TamilisaiOffice]
தமிழகத்தில் நீட் விவகாரம், அரசுக்கு எதிராக ஆளுநரின் பேச்சு, செயல்பாடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை கொண்டாடப்பட உள்ள 77வது இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள தேநீர் விருந்தினைப் புறக்கணிக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். திமுகவை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சரின் முடிவு கவலை அளிக்கிறது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், அரசு விழாக்களை புறக்கணித்து வருங்கால சந்ததியினருக்கு என்ன சொல்ல போகிறோம்.
கருத்து மோதல்கள் இருக்கலாம், அதற்காக அரசு விழாக்களை புறக்கணிப்பதாக கூறுவது கவலை அளிக்கிறது என்றுள்ளார். இதனிடையே, புதுச்சேரியில் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசை விமர்சிப்பது, மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாதது உள்ளிட்டவற்றை கண்டித்து புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…