ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளில் இருந்து வாழ்நாள் வரை நீட்டிப்பு.
ஆசிரியர் என்ற தகுதியை பெறுவதற்காக நடத்தப்படும் தேர்வு தான் TET (Teacher Eligibility Test). இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் இவர்களுக்கு வழங்க கூடிய தகுதி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகுதி சான்றிதழானது 7 ஆண்டுகளுக்கு பதிலாக ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது 2011-ம் ஆண்டிலிருந்து தேர்ச்சி பெற்று, அவர்களது சான்றிதழ் காலாவதியாகி இருந்தாலும், இனி ஆயுள் முழுவதும் இந்த சான்றிதழை பயன்படுத்த முடியும். மேலும், இந்த தகுதி சான்றிதழ் காலாவதியானவர்களுக்கும் புதிதாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கற்பித்தல் துறையில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வகையில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…