Pune fire accident [Image source : ANI ]
வகோலியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் வாகோலி பகுதியில் உள்ள அலங்காரப் பொருட்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11:43 மணியளவில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்ட குடோனில் ஒரு மணிமண்டபம் இருந்தது. அதுவும் தீப்பிடித்தது. மேலும் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல எல்பிஜி சிலிண்டர்கள் குடோனில் உடைந்ததை அடுத்து தீ அங்காங்கே பரவியது.
இந்த சம்பவம் அறிந்த புனே மாநகராட்சியின் தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களும், புனே பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎம்ஆர்டிஏ) 4 வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
குடோனின் அருகே 400 எல்பிஜி சிலிண்டர்கள் இருந்ததால், தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர் பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தனர். மேலும், இந்த தீவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…