கொரோனாவுக்கு எதிரான போரில் முன் நின்று பணியாற்றக்கூடிய ஒட்டுமொத்த மருத்துவ சமூகத்திற்கும் நன்றி என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுபடுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து நேற்று மருத்துவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், நெருக்கடியான இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிரான போரில் முன் நின்று களப் பணியாற்றக்கூடிய ஒட்டு மொத்த மருத்துவ சமூகத்தினருக்கும் நன்றி எனவும், நம் நாட்டில் முதல் கட்டத்திலேயே முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதால், இந்த இரண்டாம் அலையில் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…