தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் மக்களவை தொடங்கிய உடனே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் பதிலளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் பகல் 12 மணிக்கு விவாதம் தொடங்குகிறது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆனால், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.