குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் தலைமையில் கடந்த அக்டோபர் 17, 2019 அன்று ஆட்சேர்ப்பு தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில்,ஆந்திர பொதுச் சேவை ஆணையம் மூலம் குரூப் 1 உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வை தவிர்ப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை கோரி, ஏபிபிஎஸ்சி செயலாளர் பி.எஸ்.ஆர்.அஞ்சநேயுலு அக்டோபர் 21 அன்று பொது நிர்வாகத் துறைக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில்,குரூப் 1 உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளின் ஆட்சேர்ப்புக்கான தேர்வுகளில்,நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என்றும்,மாறாக,எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி,ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது.
ஏனெனில்,தேர்வு நடைமுறையின் மீதான வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்கும்,நம்பிக்கையை உறுதி செய்யும் வகையிலும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,2011 ஆம் ஆண்டில், என் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு,ஏபிபிஎஸ்சி ஆட்சேர்ப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக அனைத்து துணை பொறுப்புகளுக்கான நேர்முகத் தேர்வை கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…