ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அசோக் கெலாட் அரசு வலியுறுத்த உள்ளது.
முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு சச்சின் பைலட் கடந்த செவ்வாய் கிழமை ஜெய்ப்பூருக்குத் திரும்பினார்.
ஜெய்ப்பூருக்குத் திரும்பிய பின்னர் சச்சின் பைலட் முதல் முறையாக முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்து பேசினார். ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியான பாஜக முடிவு செய்தது என்று தகவல் வெளியானது.இந்நிலையில் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அசோக் கெலாட் அரசு வலியுறுத்த உள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…