இன்று மடாதிபதி நரேந்திர கிரியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக சொரூப ராணி நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதியா அகார பரிஷத் மடத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி நேற்று முன் தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலை தொடர்பாக சிக்கிய கடிதத்தின் அடிப்படையில் அவரது சீடர் ஆனந்த கிரி உட்பட மூவரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முழுவதும் அஞ்சலிக்காக மடாதிபதி நரேந்திர கிரியின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவரது உடல் சொரூப ராணி நேரு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு வீடியோ ஆதரத்துடனும், ஐந்து மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, நரேந்திர கிரியின் உடல் மடத்து சீடர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் எனவும், மகானின் இறுதி சடங்குகள் வியாழக்கிழமை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. அது போல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சீடர் ஆனந்த கிரி உட்பட மூன்று பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…