ED Director SanjayKumar Mishra [File Image]
அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அப்போது இருந்த விதிகளின் படி, அமலாக்கத்துறை இயக்குனரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று 3 ஆண்டுகள் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு 2021இல் அறிவித்து இருந்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா மத்திய அரசுக்கு சாதகமான செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிந்து , அண்மையில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் என 2 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பதவிக்காலம் நீட்டிப்பை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் , ஆனால் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி காலத்தை நீடிக்க முடியாது எனவும் , அவரை தவிர வேறு திறமையான அதிகாரிகள் இல்லையா என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி, சஞ்சய் மிஸ்ரா பதவி நீட்டிப்பை ஏற்க மறுத்து உத்தரவிட்டு இருந்தனர்.
இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்து உள்ளது. அதில், 200 நாடுகள் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு நடவடிக்கை, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை , பயங்கரவாத பண பரிவர்த்தனை தடுப்புகள் கொண்ட பகுப்பாய்வு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது எனவும், அதனால் சஞ்சய் மிஸ்ரா பதவி காலத்தை வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தது. இந்த கோரிக்கை மனு மீதான விசாரணை இன்று மாலை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…