காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்.! 2வது நாளில் முக்கிய முடிவுகள்.?

Opposition Party meeting in Bengaluru

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் இன்று 2வது நாளாக பெங்களூருவில் நடைபெற உள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலமே இருப்பதால், தேர்தல் வேளைகளில் பிரதான கட்சிகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி களத்தில் இறங்கி , பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேளையில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டு வருகிறது.

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து ஏற்கனவே பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் காங்கிரஸ் தலைமையில் நடைபெறவில்லை. பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருவமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் என 14 கட்சிகள் பங்கேற்றன.

இதனை தொடர்ந்து அடுத்த கூட்டம் பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் 2 நாள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பிட்டபடி, நேற்று இந்த கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 24 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

நேற்றைய கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி என பலர் கலந்துகொண்டனர். நேற்றைய ஆலோசனையின் தொடர்ச்சி இன்று நடைபெற உள்ளது.

இன்றைய கூட்டத்தில் தேர்தல் கூட்டணி பங்கீடு, தேர்தல் வியூகம், உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடந்த பாட்னா கூட்டத்தில், மாநில அளவில் பெரிய கட்சிகளாக இருக்கும் கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த கட்சிகளுடன் தேசிய கட்சி கூட்டணி வைக்க வேண்டும் ( உதாரணமாக தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது போல ) என ஆலோசிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்