Categories: இந்தியா

என்னங்க அம்பானி வீட்டு கல்யாணம்..! அதிக செலவுல கல்யாணம் பண்ண ஜோடி இவுங்க தான்..!

Published by
கெளதம்

கோடீஸ்வர கல்யாணம் : முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை இன்று (ஜூலை 12-ம் தேதி) திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிக விலை கொண்ட திருமணத்தின் சாதனையை இதற்கு முன் ஒரு ஜோடி செய்திருக்கிறது. ஆம், அந்த பெருமை வனிஷா மிட்டல் மற்றும் அமித் பாட்டியா ஆகியோருக்கு சொந்தமானது.

இன்று ம் நடைபெறவிருக்கும் ஆனந்த் அம்பானி திருணம் தான், எல்லாரும் இது மிகவும் விலையுயர்ந்த திருமணங்களில் ஒன்று என்று பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை விடவும் மிகவும் விலையுயர்ந்த திருமணமத்தை செய்து கொண்டு வனிஷா மிட்டல் மற்றும் அமித் பாட்டியா ஜோடி உலக சாதனை படைத்துள்ளது.

அட ஆமாங்க… வனிஷா மிட்டல் திருமணம் 2004 ஆம் ஆண்டு பிரான்சின் வெர்சாய்ஸ் நகரில் ஆறு நாள் திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடியின் திருமண விழா பாரீஸ் அருகே உள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘Chateau Vaux le Vicomte’ இல் நடைபெற்றது. திருமண நிச்சயதார்த்தம் கூட  வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெற்றது.

மிகவும் விலையுயர்ந்த இந்த திருமணத்தின் செலவு (55 மில்லியன் டாலர்) அப்போது இதன் மதிப்பு ரூ.240 கோடிக்கு மேல் என்று சொல்லப்டுகிறது. தற்போதைய ரூபாய் மதிப்பீட்டில் கணக்கிட்டால் ரூ.550 கோடிக்கு மேல் செலவாகும். பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது திருமணத்திற்கு செலவிட்டதை விட இது அதிகம் என்பது கூறப்படுகிறது. வனிஷா மற்றும் அமித் திருமணத்தின் சில சிறப்பம்சங்கள் ஈபிள் டவரில் பட்டாசு வெடித்தது குறிப்பிடத்தக்கது.

வனிஷா மிட்டல்

வனிஷா மிட்டல் உலகின் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி மிட்டலின் மகள் ஆவார். அவர் தனது குடும்பத்தின் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். வனிஷா லண்டனில் உள்ள ஐரோப்பிய வணிகப் பள்ளி மற்றும் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் (SOAS) ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ளார்.

அவர் ஆர்சிலர் மிட்டலில், குறிப்பாக பெருநிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் வணிக மேம்பாடு தொடர்பான துறைகளில் பங்கு வகித்துள்ளார். அவர் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

1 hour ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

2 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

2 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

3 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

3 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

4 hours ago