DK Shivakumar [Image Source : PTI]
தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு நீர் திறந்துவிட முடியுமோ, அவ்வளவு திறக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. தற்போது வறட்சி காலம், இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை வேண்டாம், போதுமான மழை பெய்தால் தேவையான தண்ணீர் திறக்கப்படும்.
தற்போது, காவேரியில் தமிழ்நாட்டிற்கு 10 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடுவதற்கான பணியை தொடங்கி விட்டோம். கடந்த வருடம் 400 டி.எம்.சி உபரி நீர் கடலுக்கு சென்றது. மேகதாது அணை இருந்திருந்தால் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு, தற்போது தமிழ்நாட்டுக்கு வழங்கி இருக்க முடியும். உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள் என்றும் மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…
அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…
அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…
டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று…
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…