கொரோனா பரவலை கட்டுப்படுத்த இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், மளிகை கடைகளுக்கும் மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக பரவி வருகிறது. எனவே கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக மே 7ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரையிலும் இமாச்சல் பிரதேசத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை முதல்வர் ஜெயராம் தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இது குறித்து பேசப்பட்டுள்ளது.
அப்பொழுது மே 10ஆம் தேதி முதல் பொது போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து இன்று முதல் பொது போக்குவரத்து அனைத்தும் இமாச்சல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் அங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான மளிகை கடைகள் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே திறக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…