தேசியக் கல்விக் கொள்கை நடப்பு ஆண்டிலேயே அமலுக்கு வருவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வியிலும்,உயர்கல்வியிலும் சீர்திருத்தங்களை கொண்ட தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.இதனையடுத்து,அனைவருக்கும் சமமான,தரமான குறைந்த கட்டணத்தில் ஆன கல்வி கிடைப்பதை தேசிய கல்வி கொள்கை உறுதிப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக கூறியிருந்தார்.
ஆனால்,தேசிய கல்வி கொள்கையில் அதிகாரங்கள் மத்திய அரசின் வசம் உள்ளது.இதில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறி,அதனை தமிழக அரசு எதிர்த்து வருகிறது.
இந்நிலையில்,கர்நாடகாவில் தேசியக் கல்விக் கொள்கை(NEP) நடப்பு கல்வியாண்டு 2021-2022 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமல்படுத்துவது குறித்து மாநில அரசு சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இதன்மூலம் தேசியக் கல்விக் கொள்கையை நாட்டிலேயே முதன் முதலில் அமல்படுத்திய மாநிலம் என்கிற பெயரை கர்நாடக அரசு பெற்றுள்ளது.
மேலும்,இது தொடர்பாக,மாநில உயர்கல்வி அமைச்சர் சிஎன் அஸ்வத் நாராயண் கூறுகையில்:”தேசிய கல்விக் கொள்கை -2020 அமல்படுத்த உத்தரவு பிறப்பித்த நாட்டின் முதல் மாநிலமாக கர்நாடகா உருவெடுத்துள்ளது”, என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜூலை 29 ஆம் தேதி, NEP இன் முதல் ஆண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிமுகப்படுத்திய 3,5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான திறன் அடிப்படையிலான மதிப்பீடான கற்றல் பகுப்பாய்வுக்கான கட்டமைக்கப்பட்ட மதிப்பீடு(SAFAL) தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…