நாளை மறுநாள் புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்.
பின்னர்,என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.
பின்னர்,புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து,கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக அமைச்சரவைக்கான பெயர் பட்டியலில் ஜான்குமார் அவர்களின் பெயர் இடம்பெறாதால்,அவரின் ஆதரவாளர்கள் புதுச்சேரியில் உள்ள பாஜக அலுவலகத்தை சூறையாடினர்.இதனால்,அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிப்போனது.
இதனையடுத்து,50 நாட்களுக்குப் பிறகு,புதுச்சேரி அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை,அம்மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள்,துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொடுத்தார்.
இந்நிலையில்,நாளை மறுநாள் மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரி அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…