Categories: இந்தியா

நாய்க்குட்டிக்கு பெயர் வைத்த விவகாரம்.! ராகுல்காந்தி – சோனியா காந்தி மீது புதிய புகார்.!

Published by
பாலா கலியமூர்த்தி

சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்திக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். அதாவது, கோவாவில் இருந்து வாங்கி வந்த ஜேக் ரசல் டெரியர் எனும் இனத்தை சேர்ந்த குட்டி நாயை காங்கிரஸ் மூத்த தலைவரும் தாயாருமான சோனியா காந்திக்கு பரிசாக வழங்கினார்.  இந்த நாய்க்குட்டியை சோனியா காந்தி மகிழ்ச்சியாக பெற்று கொண்டார். சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சர்வதேச விலங்குகள் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது.

இதன்பின் அந்த நாய் ககுட்டிக்கு ‛நூரி’ என பெயரிட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியான நிலையில், நாய்க்குட்டிக்கு ‛நூரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார். சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோவை பலரும் ரசித்த நிலையில், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அந்த நாய்க்குட்டிக்கு சூட்டப்பட்டுள்ள ‛நூரி’ எனும் பெயர் தான் சர்ச்சையின் காரணமாக அமைந்தது. இதுதொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் கூறுகையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தி உள்ளதாக அவர் சாடியுள்ளார்.

இந்த நிலையில், சோனியா காந்திக்கு, ராகுல் காந்தி பரிசாக வழங்கிய நாய்க்கு நூரி என்று பெயர் சூட்டியதற்கு, இஸ்லாமிய அமைப்பு ஒன்று புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நூரி என்ற பெயர் குரானில் இருப்பதாகவும், இந்த பெயரை நாய் குட்டிக்கு வைத்து முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தி இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மகள்கள் ஏராளமானவர்கள் நூரி எனும் பெயரை கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் ராகுல் காந்தியின் இந்த செயல் என்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீதான மரியாதையை எதிர்மறையாக பிரதிபலிக்கிறது என்று குற்றசாட்டியுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

23 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

24 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago