செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் தவறானது என்று தேசிய தேர்வு மையம் விளக்கமளித்துள்ளது.
தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) செப்டம்பர் 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் ஒரு அறிவிப்பு பரவி வருகிறது.அத்தகைய அறிவிப்பு போலியானது மற்றும் மார்பிங் செய்யப்பட்டது.மேலும், மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தேசிய தேர்வு மையம் (என்.டி.ஏ) அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
JEE முதன்மை 2021 தேர்வு தேதிகள் :
அறிவிப்பு போலியானது என்றாலும், நுழைவுத் தேர்வுகளின் தேர்வு தேதிகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள், இருப்பினும்,நடப்பு ஆண்டிற்கான விண்ணப்ப படிவம் இன்னும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக, விண்ணப்ப படிவங்கள் தேர்வு தேதிக்கு குறைந்தது 60 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படும்.
இதற்கிடையில்,நீட் 2021 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் கொரோனா பரவல் காரணங்களால்,குறிப்பிட்ட தேர்வு நடைபெறுவது சாத்தியமில்லை.
கடந்த 2020 ஆம் ஆண்டில், மருத்துவ நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.எனவே,இந்த ஆண்டும் நீட் தேர்வு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் முன்னதாக செய்தியாளர்களுக்கு தெரிவித்தனர்.
இதனால்,நீட் தேர்வு ஒத்திவைக்கப்படும் என்றும் புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…