4,000 கோடி ரூபாய் அபராதம்.! கழிவுகளை அகற்றாத பீகார் மாநிலத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.!

Bhihar waste

கழிவுகளைமுறையாக அகற்றாத பீகார் மாநிலத்திற்கு 4000 கோடி ரூபாய் அபராதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளது. 

தேசிய பசுமை தீர்ப்பாயமான, NGTயானது பீகார் மாநில அரசுக்கு, திரவ மற்றும் திடக்கழிவுகளை அறிவியல் அபூர்வமாக அகற்ற தவறியதற்காக ரூ.4,000 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையினை கொண்டு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, “சட்டத்தின் உத்தரவை மீறி, திரவ மற்றும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்ற தவறியதற்காக, மாநில அரசுக்கு 4,000 கோடி ரூபாய் இழப்பீடு விதிக்கிறோம்.’ என உத்தரவிட்டுள்ளனர்.  தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி அபராத தொகையினை இரண்டு மாதங்களுக்குள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என நீதிமன்ற அமர்வு கூறியது.

இந்த தொகையை திடக்கழிவு பதப்படுத்தும் வசதிகள், மரபு கழிவுகளை சரிசெய்தல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STP) மற்றும் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்கள் (FSTP) அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்