டொயோட்டா முதலீடு செய்யாது என்ற செய்தி உண்மையல்ல..பிரகாஷ் ஜவடேகர்.!
இந்தியாவில் வாகனங்களுக்கான வரி மிக அதிகமாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், டொயோட்டா கிர்லோஸ்கர் கார் நிறுவனத்தின் தலைவர் ஷேகர் விஸ்வநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்தியாவில் பின்பற்றப்படும் வரியால் வாகன நிறுவனங்களின் வர்த்தகம் கேள்விக் குறியாகவே உள்ளது.
வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் கடும் சிரமமாக உள்ளது. இதனால், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய மாட்டோம். ஆனால், இந்தியாவை வெளியேறும் திட்டம் இல்லை என தெரிவித்தார்.
இதன்காரணமாக டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யாது என செய்திகள் வெளியாகியது. இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யாது என்று வெளிவரும் செய்திகள் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர், அடுத்த 12 மாதங்களில் டொயோட்டா ரூ .2,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் என பதிவிட்டுள்ளார்.
The news that Toyota Company will stop investing in India is incorrect. @vikramkirloskar has clarified that Toyota will invest more than Rs 2000 crore in next 12 months.@PIB_India
— Prakash Javadekar (@PrakashJavdekar) September 15, 2020