சப்னா என்ற பெண் ஊழியர் உரிமையாளரான நிகிதாவிடம் சம்பளத்தை கேட்க, அவர் தனது வீட்டு நாயை வைத்து ஊழியரை கடிக்க செய்துள்ளார்.
டெல்லியில் ஆயுர்வேத ஸ்பா சென்டர் நடத்தி வருபவர் நிகிதா. இவரது கடையில் வேலை செய்பவர் சப்னா. இவர் அந்த ஸ்பா சென்டரில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பணி புரிந்ததை அடுத்து, தான் வேலை செய்ததற்கான சம்பளத்தை உரிமையாளரான நிகிதாவிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, நிகிதா நாயை விட்டு கடிக்க வைத்துள்ளார். இதனால் அந்த பெண் ஊழியரின் முகத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது மட்டுமில்லாமல், அவரது 2 பற்களும் உடைந்துள்ளது.
ஜூன் 11-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்திற்கு டெல்லி காவல்துறையானது 20 நாட்கள் அவகாசம் எடுத்த பின்னர் ஜூலை 2-ம் தேதி எஃப். ஐ. ஆர் பதிவு செய்தனர். அதுவும் இந்த விவகாரத்தில் எம். எல். ஏ மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தலையிட்ட பின்னரே எஃப். ஐ. ஆர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை குற்றம்சாட்டப்பட்ட நிகிதா மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனையடுத்து சப்னா தனது சிகிச்சையை எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்து வந்தார். தற்போது நிகிதா தனது இடத்திலிருந்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…