பஞ்சாபில் உள்ள ஒரு நபர் தனது காரினை கொண்டு நாயின் மீது ஏற்றி கொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கபூர்தலாவில் ஒரு நபர் தனது காரினை கொண்டு நாயின் மீது ஏற்றி இறக்கி கொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதன் சிசிடிவி காட்சிகளை பாராளுமன்ற உறுப்பினரும், விலங்கு உரிமை ஆர்வலருமான மேக்னா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். முகத்தை மறைத்து கொண்டு நாயினை தனது கார் நிற்கும் இடத்திலிருந்து சிறிது தொலைவில் வைத்து அந்த நபர் காரினை கொண்டு அந்த நாயின் மீது ஏற்றி இறக்குகிறார்.காயமடைந்த நாய் வலியில் அவ்விடத்திலிருந்து ஒடி, அடுத்த 30 நிமிடங்களில் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்த பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்(PFA) என்ற அமைப்பு காரின் நம்பரை வைத்து அந்த நபரை கண்டுபிடித்துள்ளனர். அவர் கபூர்தலாவின் டண்டுபூர் கிராமத்தில் வசிக்கும் குரிந்தர் சிங் என்றும், அவர் நாய்களை விற்பவரும், வளர்பவரும், பின் நாய்களை கூண்டுகளில் வைத்து சண்டைகளுக்கு பயன்படுத்துவார் என்று தெரிய வந்தது. அதனையடுத்து பிஎஃப்ஏ அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு சென்ற பார்த்த போது அவர் வீட்டில் இல்லையாம். அதனையடுத்து கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த நாய்களை பிஎஃப்ஏ அதிகாரிகள் மீட்டனர் . குற்றசாட்டப்பட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…