Rashtrapati Bhavan [Image source: AP]
குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) மாளிகையில் அருங்காட்சியக வளாகம், இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்னதாக, வாரத்தில் 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இனி ஜூன் 1 அதாவது இன்று முதல் திங்கள் தவிர வாரத்தில் 6 நாட்கள் பார்வையிடலாம் என்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்து பார்க்கலாம் என்றும் ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும் இந்தத் மாளிகை, 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, ஜம்மு & காஷ்மீர் மற்றும் தாஜ்மஹாலைச் சுற்றிலும் முகலாயர்களால் கட்டப்பட்ட தோட்டங்களின் பாணியில் அமைக்கப்பட்டள்ளது.
பார்வையாளர்களுக்கான சுற்றுகள்:
குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தின் வழியாக பயணம் மூன்று சுற்றுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் ராஷ்டிரபதி பவனின் பிரதான கட்டிடம் மற்றும் மத்திய புல்வெளியை உள்ளடக்கியது. மேலும் இதில் அசோக் ஹால், தர்பார் ஹால், பேங்க்வெட் ஹால் மற்றும் டிராயிங் அறைகள் போன்ற அதன் முதன்மை அறைகள் கூட அடங்கும்.
இரண்டாவது சுற்று ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியக வளாகத்தின் சுற்றுப்பயணத்தை குறிக்கும். மூன்றாவது சுற்றுப்பயணம் ராஷ்டிரபதி பவனின் புகழ்பெற்ற தோட்டங்களான – அம்ரித் உத்யன், மூலிகைத் தோட்டம், இசை பூங்கா மற்றும் ஆன்மீகத் தோட்டம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராஷ்டிரபதி பவனில் உள்ள வரலாற்று முகலாய பூங்காக்கள்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…