கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கக்கூடிய குழந்தைகளின் மறுவாழ்வுக்கான வழிமுறைகளை மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனாவின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆதரவற்று தனித்து விடப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் பெற்றோரை இழந்து உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் பெற்றோரை இழந்து பராமரிப்பிற்கு ஆளில்லாத குழந்தைகளை 24 மணி நேரத்தில் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட குழந்தைகள் நல குழுவே வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த தகவல்களை 1908 எனும் இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனவும், இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றி தெரிவிப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல பெற்றோரை இழந்து தவித்து கூடிய குழந்தைகள் சட்டபூர்வமாக மட்டுமே தடுக்கப்பட வேண்டும் என்பதால், அதற்கான இணையதளத்தை மத்திய அரசு நேரடியாகவும் வெளியிட்டுள்ளது. அதுபோல இதுபோன்ற குழந்தைகள் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களின் நலன் குறித்து குழந்தைகள் நலக்குழு தொடர்ச்சியாக கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…