சுயமாக படித்ததன் விளைவு…முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி தேர்வில் 10 வது ரேங்க் பெற்று சாதனை படைத்த பீகார் மாணவர்..!

பீகார் மாணவர் சத்யம் காந்தி, தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வை முறியடித்து இந்திய அளவில் 10 வது ரேங்க் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2020-ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகின.இதில் 761 பேர் உடனடி நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,பீகாரில் ஒரு கிராமப்புற குடும்பத்தில் இருந்து டெல்லி வந்த சத்யம் காந்தி என்ற மாணவர் ஒரு சிறிய அறை வாடகைக்கு எடுத்து,அங்கு தானாக படித்து ,தனது முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 10-வது ரேங் பெற்று சாதித்துள்ளார்.
22 வயதான அவர் ஒரு வருடமும் யுபிஎஸ்சி தேர்வுக்கு எந்தவித பயிற்சியும் இல்லாமல் படித்தார் மற்றும் சுய படிப்பே வெற்றிக்கு முக்கியம் என்று கூறுகிறார்.அவரது யுபிஎஸ்சி தயாரிப்பில் உதவியாக தனது சிறிய பிஜி அறையில் வரைபடங்கள் மற்றும் கால அட்டவணைகள் சுவர்களில் ஒட்டப்பட்ட புத்தகங்கள் நிறைந்துள்ளன என்றும்,முழு கவனத்துடன் ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணிநேரம் வரை படித்ததாக அவர் கூறினார்.
எளிய பின்னணியில் இருந்து வந்த சத்யத்தின் தந்தை தனது மகன் டெல்லியில் படிக்க உதவ கடன் வாங்கியிருந்தார். அதற்கேப்ற,அவரது மகன் தனது UPSC தயாரிப்பிலிருந்து திசை திரும்பாமல் தந்தையை பெருமைப்படுத்தியுள்ளார்.
மேலும்,அவர் பீகார் கேடரில் சேர விரும்புவதாகவும்,ஐஏஎஸ் ஆன பிறகு கிராமப்புறங்களில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025