குடிமைப்பணி பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து அதற்கான தேர்வை நடத்தி வருகிறது. முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும்.
அந்த வகையில், நடப்பு 2020-ம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலிப்பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 31-ஆம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 4-ஆம் தேதி இந்தத்தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 72 நகரங்களில் 2 ஆயிரத்து 569 மையங்களில் சுமார் 6.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள். இந்நிலையில், அக்டோபர் 4-ம் தேதி நடந்த குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. நிர்வாகம் தற்போடு வெளியிட்டுள்ளது. மேலும், முதன்மை தேர்வு ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதல்முறையாக தேர்வு நடைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டது தேர்வு எழுதிய மாணவ-மாணவியரிடையே பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று…
குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு…
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…