குடிமைப்பணி பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து அதற்கான தேர்வை நடத்தி வருகிறது. முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும். அந்த வகையில், நடப்பு 2020-ம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலிப்பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 31-ஆம் தேதி […]