நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு பிறகு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.கடந்த மே மாதம் நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
இந்நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நீட் நுழைவு தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பை இணையத்தில் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை .
தற்போது மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு பிறகு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் தேர்வு முடிவுகளை http://www.nta.ac.in , http://www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் அறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…