கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில், தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் அவர்கள், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் கொரோனா வீதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது என்றும், 222 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கேரள மாநிலத்தில் 10 மாவட்டங்கள் உட்பட மொத்தம் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், இந்த 18 மாவட்டங்களில் மட்டும் 47.5 சதவீத கொரோனா பாதிப்புகள் பதிவாகின்றன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் இந்தியாவை பொருத்தவரை கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…