14 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பணப்பையை தற்போது மும்பை நபர் திரும்ப பெற்றுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்-பன்வெல் என்ற உள்ளூர் ரயிலில் பயணம் செய்த மும்பை நபரான ஹேமந்த் படல்கர் ரூ. 900 அடங்கிய தனது பணப்பையை தொலைத்து விட்டார். உடனடியாக அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) அதிகாரிக்கு புகார் செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது 14 ஆண்டுகள் கழித்து இழந்த தனது பணப்பையை பெற்று கொண்டார் ஹேமந்த்.
ஏப்ரல் மாதமே போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட பணப்பையை வாங்க ஹேமந்த்க்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் ஊரடங்கால் வாங்க செல்ல இயலவில்லையாம். தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மும்பையில் பன்வெல்லில் வசிக்கும் ஹேமந்த் வாஷியில் உள்ள ஜிஆர்பி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு தொலைந்த பணத்தில் ரூ. 300 வழங்கப்பட்டுள்ளதாம். மீதமுள்ள 500 நோட்டு செல்லாத நோட்டு என்பதால் புதிய நோட்டாக மாற்றிய பின் வழங்கப்பட உள்ளதாம். மேலும் பணப்பையை திருடியவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…