பஞ்சாயத்து கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, மணக்கோலத்தில் வந்து வெற்றி சான்றிதழை பெற்ற பெண்….!

Default Image

பஞ்சாயத்து கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, மணக்கோலத்தில் வந்து வெற்றி சான்றிதழை பெற்ற பெண்.

உத்திர பிரதேசத்தில், பஞ்சாயத்து கவுன்சில் தேர்தலில் 28 வயதான பூனம் சர்மா வெற்றி பெற்றுள்ளார். பஞ்சாயத்து தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், அன்று தான் சர்மாவின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ராம்பூரில், அவருக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த நடு பகுதியிலேயே தான் வெற்றி பெற்ற சான்றிதழ் பெறுவதற்காக வாக்கு எண்ணிக்கைக்கு மையத்திற்கு விரைந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9:30 மணி அளவில், சர்மா திருமணம் நடைபெற்ற இடத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு வெற்றி சான்றிதழை பெறுவதற்காக அங்கு சென்றுள்ளார். திருமண அலங்காரத்துடன் சென்று வெற்றி சான்றிதழை வாங்கி உள்ளார். திருமண கோலத்தில் சென்ற  ஷர்மாவை, வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைவரும் திகைப்புடன் பார்த்துள்ளனர்.

மேலும் அவர் அதிகாரிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் கூறுகையில், நான் இப்போது பிடிசி உறுப்பினராக இருப்பதால் இது எனக்கு ஒரு சிறந்த திருமண பரிசாக கிடடைத்துள்ளது. அனைத்து சடங்குகளும் முடிந்ததும் வர்மாவுக்கு சற்று முன்னதாகவே நான் 31 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றேன் என்று கூறப்பட்டதால், இந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

வெற்றி சான்றிதழ் பெறுவதற்கு, திருமண மண்டபத்தை விட்டு வெளியேற எனது மாமியார் அனுமதித்தார். எனது வெற்றியில் எனது கிராமத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். வெற்றி சான்றிதழைப் பெற்ற உடன் அங்கிருந்து சென்ற பின் அவருக்கு மீதமுள்ள சடங்குகள் அனைத்தும்  செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்