Play Storeலிருந்து-டிக்டாக் நீக்கம்!- வேகமெடுக்கும் அதிரடி

Published by
kavitha

சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததையடுத்து, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் ஆப் அதிரடியாக  நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த, 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய அத்துமீறல் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் தொடர்ந்து நிலவி வரும் மோதலை அடுத்து இருநாட்டு எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இவ்வாறு இருக்க சமூக வலைதளங்களில் சீனாவின் ஆப்பிற்கு எல்லாம் அரசு தடைவிதிக்க உள்ளது என்ற ஒரு தகவல் பரவி வந்தது.அதனை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கையாக சீனாவின் அனைத்து விதமான ஆப்பிற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியான தகவல் :இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கின்ற வகையில்சீன ஆப்களுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம் உளவு அமைப்புகள் பரிந்துரைத்தாக தகவல் தெரிவித்ததாகவும்  இது தொடர்பாக பலகட்ட ஆலோசனைகளை  நடந்திய மத்திய அரசு சீனாவின் 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து  நேற்று இரவு உத்தரவு பிறப்பித்து உள்ளது.அதன்படி, ‘டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர், கிளாஷ் ஆப் கிங்ஸ், டி.யூ., பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப், எம்.ஐ., கம்யூனிட்டி, சி.எம்., பிரவுசர், வைரஸ் கிளீனர், பியூட்டி பிளஸ், வீ சாட், எக்ஸெண்டர், செல்பி சிட்டி, வீ சின்க், விவா வீடியோ, டி.யூ மற்றும்  ரெக்கார்டர், கேம் ஸ்கேன்னர், கிளீன் மாஸ்டர்’  போன்ற சீனாவின் 59 செயலிகளுக்கும் இந்தியாவில் முற்றிலும்  தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அரசால் தடைவிதிக்கப்பட்டதால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்-டாக் ஆப் தற்போது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பதறியடித்த டிக்டாக் ஆப் நிறுவனம் இந்திய அரசிற்கு ஒரு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது

டிக்டாக் நிறுவனம் தரப்பில்  வெளியிட்டப்பட்ட அறிக்கையில் பயனாளர்களின் தகவல்களை சீனா உட்பட எந்த வெளிநாட்டு அரசுகளுடனும் நாங்கள் பகிர்ந்ததில்லை என்று இந்திய அரசிற்கு அறிக்கையில் கதறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

16 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

46 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago