அசாமில் ஆட்டோ மீது ட்ரக் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டம் பைதல்கால் என்ற இடத்தில் அதிகாலை 5 மணியளவில் கரீம்கஞ்ச் நோக்கி சிமெண்ட் ஏற்றி வந்த ட்ரக் ஒன்று ஆட்டோ ரிக்ஷா மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் ஒருவரைத் தவிர ஆட்டோவில் பயணம் செய்த அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாகவும், விபத்துக்கு காரணமான ட்ரக் ட்ரைவர் தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.இந்த விபத்து குறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அதில், விபத்தில் உயிரிழந்த 9 பேருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், ஆட்டோ மீது மோதி விட்டு தப்பி ஓடிய டிரைவரை கண்டுபிடிப்பதற்கு அசாம் போலீசார் முயற்சி செய்து வருவதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…