கடந்த மே 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி,50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து குறிப்பிடத்தக்க சமூக ஊடக நிறுவனங்களும் இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரி, ஒரு முதன்மை இணக்க அதிகாரி மற்றும் ஒரு நோடல் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், அத்தகைய அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும்,இந்த மூன்று அதிகாரிகளும் இந்தியாவில் வசிப்பவர்களிடம் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,இந்திய பயனர்களிடமிருந்து வரும் புகார்களைத் தீர்ப்பதற்கு,இந்தியாவுக்கான டுவிட்டர் நிறுவனத்தின் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சாதுர் நியமிக்கப்பட்டார்.ஆனால்,அரசின் விதிப்படி,தர்மேந்திர சாதுர் அவர்களின் பெயர்,முகவரி உள்ளிட்டவை டுவிட்டர் இந்தியா இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில்,டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.இதனையடுத்து,டுவிட்டர் இந்தியாவின் இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி தர்மேந்திர சாதுர் பதவி விலகினார்.
இதனையடுத்து,புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் தேவைப்படும் வகையில் குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்கத் தவறியதால்,தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 79 (1) இன் கீழ்,சட்ட பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழக்க நேரிடும் என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில்,டுவிட்டர் நிறுவனம் தற்போது இந்தியாவின் குடியுரிமை குறை தீர்க்கும் அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரை நியமித்துள்ளது. அதன்படி,பயனர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க ‘grievance-officer-in @ twitter.com’ இல் குறை தீர்க்கும் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…