உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளனர்.மீட்கப்பட்ட சிறுவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ‘சமோசா’ வாங்க வெளியே சென்று வீடு திரும்பவில்லை என்று காவல் துறை தெரிவித்தனர்.
இறந்தவர்களில் மஹுவா பாட்டியாட் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் அங்குல் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.மீட்கப்பட்ட இரு சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து ஆகாஷின் தந்தை ராகேஷ் கமல் கூறுகையில், “எனது மகனும், அங்குலும் மிக நெருங்கிய நண்பர்கள். அவர்கள் ‘சமோசா’ வாங்குவதற்காக சென்றபோது நல்லாதான் இருந்தார்கள் என்று கூறிய அவர் இது குறித்து காவல்துறையினர் விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.
டெல்லி : தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தில் பதவியேற்கின்றனர். அதன்படி, தி.மு.க…
சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…
சென்னை : மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…
சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…