கர்நாடகாவில் முதன்முறையாக குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு….கண்ணை இழந்து தவிக்கும் குழந்தைகள்.
இந்தியாவில் கொரோனா கடந்த ஆண்டு முதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இதன் விளைவாக ஆங்காங்கே மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தனர். இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸின் 2 வது அலை மக்களிடையே பரவி வாட்டி வதைத்த நிலையில் தற்போது கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என பூஞ்சை தொற்றுகள் கலர் கலராக பரவி மக்களை அச்சுருத்தி வருகிறது.
கொரோனா 3 வது அலையே குழந்தைகளை பாதிக்கும் என கூறிவந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் முதன் முறையாக மியூகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை தொற்று 2 குழந்தைகளை பாதித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியும், சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவனும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் மூத்த சுகாதார அதிகாரி கூறுகையில் அரசு போரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், அவர்கள் கடுமையான சிறார் நீரிழிவு நோயால் (ஏ.ஜே.டி) பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் 2 குழந்தைகள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர், ஆனால் அது அவர்களுக்கு தெரியாது என்றும் சிக்கல்கள் அதிகமான பின்னரே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து 2 குழந்தைகளும் தனது ஒரு கண்ணை இழக்க நேரிடும் என்று சிகிச்சை அறிக்கை தெரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…