இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்..!

டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பபெற கூறி விவசாயிகள் கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று 6-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து கலந்துரையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே தங்களின் ஒரே கோரிக்கை என விவசாயிகள் கூறுகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், ஒருபுறம் நேற்று நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது. இந்த பந்தை வெற்றிகரமாக செய்ய, 23 அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்தன, மேலும் பல அமைப்பினர் ஆதரவு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், நேற்று இரவு 7 மணிக்கு மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாயிகள் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 அட்டவணை வெளியீடு! சென்னை -மும்பை மோதும் போட்டி எப்போது?
February 16, 2025
கோப்பை இந்தியாவுக்கு தான்…ஹர்திக் பாண்டியா சம்பவம் பண்ண போறாரு! மைக்கல் கிளார்க் பேச்சு!
February 16, 2025
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025