Central Minister Giriraj Singh [Image source : Wikipedia]
கோட்சேவும் இந்தியாவின் மகன் தான் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கோட்சே பற்றி பேசிய கருத்துக்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளது. அவர் பேசுகையில், காந்தியை கொன்றவர் என்றாலும் கோட்சேவும் இந்தியாவின் மகன் தான் எனவும், அக்பர், அவுரங்க ஷீப் போல இந்தியாவில் ஆக்கிரமிக்க வந்தவர் அல்ல எனவும் குறிப்பிட்டார்.
மேலும், சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் மத மாற்றம் அதிகஅளவில் நடைபெற்று வருவதாகவும், அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் மதமாற்றத்திற்கு சட்டங்கள் வகுக்கப்படும் என்றும் அதனை மீறுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சனாதானத்தை மீறாத வகையில் இருக்கும் வரையில் தான் இந்தியா ஒரு நாடாக இருக்கும் எனவும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…