உத்தரபிரதேசத்தில் கிராம பஞ்சாயத்துகள், சேத்ரா பஞ்சாயத்துகள், மற்றும் ஜில பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 15 ம் தேதியும், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 19, 26, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.மேலும் வாக்குகள் மே 2 ஆம் தேதி அன்று எண்ணப்படும்.
ஆகவே,இந்த பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ரே பரேலி மற்றும் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் விளம்பர போஸ்டர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை அங்குள்ள தெரு நாய்களின் மீது ஒட்டியுள்ளனர்.இந்த புகைப்படம் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.பல விலங்கு நல ஆர்வலர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆர்வலர்களில் ஒருவர், இவ்வாறு தவறான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதுகுறித்து பெயர் குறிப்பிடாத ஒரு வேட்பாளர் கூறுகையில்,””பிரச்சாரத்தில் நாய்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் மாதிரி நடத்தை விதிகளில் எந்த விதியும் இல்லை. நாங்கள் எந்த வகையிலும் விலங்குகளை தொந்தரவு செய்வதில்லை. உண்மையில், ஒவ்வொரு நாய்களுக்கும் நாங்கள் உணவளிக்கிறோம்.நாய்களின் உடம்பில் போஸ்டர் ஒட்டியது ஒரு புதிய யோசனை அப்போதுதான் வாக்காளர்களை ஈர்க்க முடியும்”,என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைரலாகும் நாய்களின் புகைப்படத்தைக் கண்ட விலங்கு நல ஆர்வலர்கள், இவை கடுமையான தண்டனைக்குரிய குற்றம்,இவ்வாறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…