UP CM Yogi Adityanath [File Image]
உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , இன்று ஓர் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நீர் நிலைகளில் டால்பின்களின் எண்ணிக்கையானது கனிசமான அளவில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டால்பின்களை உத்திர பிரதேச மாநில அரசு நீர்விலங்கு என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு விழாவில் அவர் பேசுகையில், உத்திர பிரதேசத்தில் உள்ள சம்பல், கங்கை, கெருவா, காக்ரா, ராப்தி மற்றும் யமுனா போன்ற இந்திய நதிகள் புகழ்பெற்ற டால்பின்களின் தாயகமாக விளங்குகிறது. தற்போது, உத்தரபிரதேசத்தில் இந்த விலங்கின் மொத்த தொகை சுமார் 2,000ஆக உள்ளது.
டால்பின்கள் மாநில நீர்விலங்காக அறிவிக்கப்பட்டதால், அவை வாழும் இடத்தை பொதுமக்கள் அசுத்தப்படுத்த கூடாது. நீர்நிலைகளை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் சுற்றுசூழலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியதாகும்.
உள்ளூர் மக்களுக்கு, மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையேயான தொடர்பு பற்றியும், விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் , இதற்கான பயிச்சி அழிக்கப்படும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள டால்பின்களின் எண்ணிக்கையை கண்டறியும் பணியை உபி அரசு துவங்கியுள்ளது. முதற்கட்டமாக ஹபூர் மாவட்டத்தில் கர் கங்கா நீர் நிலைகளில் இந்த பணி துவங்கப்பட்டுள்ளது. டால்பின்களை GPS கருவி மூலம் கண்காணிக்கும் பணியும் துவங்கியுள்ளது.
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…
சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…