இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ வந்தது. இந்த நிறுவனம் வந்த பிறகு மற்ற நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது அது மட்டுமல்லாமல் மற்ற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதனால் சில நிறுவனங்கள் மூடப்பட்டன.
சில நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய AGR பாக்கித் தொகையால் பல நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அனைத்து தொலைத் தொடர்பு நிறுவங்கள் இணைந்து மொத்தமாக ரூ.1.47 லட்சம் கோடி மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது AGR பாக்கித் தொகையான ரூ.60 கோடியை செலுத்தி விட்டது. ஜியோ நிறுவனத்தால் நஷ்டத்தை சந்தித்து வரும் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தரவேண்டிய 92,000 கோடி ரூபாய் தொகையைத் தராமல் இருந்து வந்த நிலையில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அடுத்த மாதம் 17-ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்தவேண்டிய கட்டணத்தை செலுத்தவேண்டும் எனவும் செலுத்தத் தவறினால் அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது.
இதைத்தொடர்ந்து வோடஃபோன் ஐடியா 2,500 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளது. வோடஃபோன் நிறுவனம் 53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய இடத்தில் வெறும் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையை செலுத்தாவிட்டால் இந்தியாவில் வோடஃபோன் நிறுவனம் இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி வோடஃபோன் நிறுவனம் இழுத்து மூடினால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
வோடஃபோன் நிறுவனம் 37 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் சேவைகளை கொண்டு எஸ்.பி.ஐ வங்கியிடம் மட்டும் 12 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. மேலும் மற்ற வங்கிகளிடம் இருந்தும் வோடஃபோன் நிறுவனம் கடன் வாங்கி உள்ளது.
வோடஃபோன் நிறுவனம் மூடினால் அதன் சொத்துகளை வங்கிகள் பறிமுதல் செய்து குறைவான தொகைக்கு ஏலத்தில் விடுவார்கள் ஆனால் அந்த தொகை வங்கி கடன் தொகைக்கு ஈடாகுமா என்பது தெரியவில்லை. இந்த நிறுவனம் மூடப்பட்டால் நேரடியாக 13,500 ஊழியர்களும் , மறைமுகமாக ஏராளமான ஊழியர்களும் வேலையை இழக்கின்ற சூழல் ஏற்படும்.
தற்போது தொலைத்தொடர்பு 4 நிறுவனங்களாக உள்ள நிலையில் ஒருவேளை 2 நிறுவனங்களாகச் சுருங்கும் பட்சத்தில் அந்த 2 நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம் .மேலும் அந்த நிறுவனம் வைப்பதுதான் கட்டணம் என்ற நிலை ஏற்படலாம்.
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…