ஆப்பிள் ஹேக்கிங்கின் பின்னணியில் ஜார்ஜ் சொரோஸ் தொடர்பு இருப்பதாக பாஜகவின் அமித் மாளவியா குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் தொலைபேசிகளை ஹேக் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். சசி தரூர், ராகவ் சதா, பிரியங்கா சதுர்வேதி, அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக தெரிவித்தனர். இந்த செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டையும் அனைவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில் பாஜக தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மாளவியா ஆப்பிள் அனுப்பிய ஈமெயிலுக்கும் அமெரிக்கத் தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். சமூக ஊடகத் தளமான எக்ஸ் ட்விட்டரில் அமித் மாளவியா பதிவிட்ட பதிவில் “சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சல்கள் எப்படி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஜார்ஜ் சொரோஸால் நிதியளிக்கப்பட்ட “அக்ஸஸ் நவ் ( Access Now)” என்ற தொண்டு நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கும் இடையேயான தொடர்பை இது காட்டுகிறது. என கூறி ட்விட்டரில் தொடர்பதிவுகளை அமித் மாளவியா பதிவிட்டுள்ளார்.
பா.சிதம்பரம் பதிவிற்கு பதிலளித்த மாளவியா “பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு உளவு பார்ப்பதாக வெளியான குற்றச்சாட்டு இதுவரை தீர்க்கப்படாத நிலையில் அதேபோல மற்றொரு குற்றச்சாட்டு வந்து இருப்பது வெறும் சந்தேகம்” தான். பெகாசஸ் சரச்சை எழுந்தபோது அப்போதைய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் நிதியமைச்சகம் அந்தக் குற்றச்சாட்டுபிழையானவை என கூறிய செய்தி ஸ்கிரீன்ஷாட்டை மாளவியா காட்டி. அப்போது, “நீங்கள் தான் உள்துறை அமைச்சராக இருந்தீர்கள் நினைவிருக்கிறதா மிஸ்டர் சிதம்பரம்..? என குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிள் எச்சரிக்கை செய்தி சர்ச்சை குறித்து, நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த விவகாரம் குறித்து அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…