ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதல் 5 லட்சம் நிவாரணம்.! ஆய்வுக்கு பின் முதல்வர் மம்தா அறிவிப்பு .!

Mamata Banarjee

விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தொகை அளிக்கப்படும் என மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார். 

ஒடிசாவில் நேற்று பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் முதல் – சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகி பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 260 பேர் உயிரிழந்ததாகவும், 900க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரயில் விபத்து நடந்த இடத்திற்கு மத்திய அமைச்சர்கள், ஒடிசா மாநில முதல்வர், தமிழக அமைச்சர்கள் என பலர் வந்து மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து, தற்போது, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி ஒடிசா மாநிலத்திற்கு தனி விமானம் மூலம் வந்து விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்  செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மம்தா பேனர்ஜி, ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய ரயில்வேத்துறை 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குகிறது. நாங்கள் எங்கள் மாநில மக்களுக்கு (மேற்கு வங்கம்) தலா ரூ.5 லட்சம் வழங்குவோம். எனவும், பணி முடியும் வரை ரயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் ஒத்துழைத்து எங்கள் மாநில அரசு பணியாற்றும் எனவும் மம்தா பேனர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்