[Photo Credit: The Hindu / Sushil Kumar Verma]
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் சம்மேளனம் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் சவாலை ஏற்றுக்கொண்ட மல்யுத்த வீராங்கனைகள்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் சம்மேளனம் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது, ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதகங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல் நிலையத்தில் மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மல்யுத்த வீராங்கனைகள் கடந்த 23-ம் தேதி மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். டெல்லி ஜந்தர் மந்திர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் பிரிஜ் பூஷன் சரண் மீது 2 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சரண், தனக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உண்மையை கண்டறியும் நார்கோ பகுப்பாய்வு அல்லது பாலிகிராஃப் சோதனைக்கு உட்படுத்தத் நான் தயாராக இருப்பதாக நேற்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பிரிஜ் பூஷண் ஃபேஸ்புக் பதிவில், நார்கோ சோதனை, பாலிகிராபி சோதனை அல்லது பொய் கண்டறிதல் ஆகிய சோதனையை பெற நான் தயாராக இருக்கிறேன். அதே சோதனை, வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோரும் இந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது எனது நிபந்தனை. இரு மல்யுத்த வீரர்களும் தங்கள் சோதனைக்கு தயாராக இருந்தால், பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிக்கவும், நானும் இதற்கு தயாராக இருக்கிறேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றுள்ளார்.
இதற்கு பதிலளித்து மல்யுத்த வீராங்கனைகள் தரப்பில் கூறியிருப்பதாவது, நார்கோ சோதனை, பாலிகிராபி சோதனை அல்லது உண்மையை (பொய்) கண்டறியும் சோதனைகளுக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம். புகார் கொடுத்த அனைவரும் இந்த சோதனைக்கு (நார்கோ டெஸ்ட்) தயாராக உள்ளனர். நாட்டிற்காக விருது வாங்கி சாதனை படைத்தவர்க்கு பிரிஜ் பூஷன் அளித்த கொடுமையை, முழு நாடே அறியும் வகையில், இதனை நேரலை (live) செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…