கேரள மாநிலத்திற்கு ஆக்சிஜன் தேவை அதிகம் உள்ளதால் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொடுப்பது சாத்தியமற்றது என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக கொரோனாவால் உயிரிழப்பவர்களை விட, தற்போதெல்லாம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தான் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கேரள மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் காணப்படுகிறது.
தற்போது கேரளாவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மே 15 ஆம் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 6 லட்சமாக அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஏற்கனவே தங்களிடம் இருந்த 450 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கியதால், தற்பொழுது தங்களிடம் 86 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே மீதம் உள்ளதாகவும், இனி தங்களால் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை கொடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மே 15 -க்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் இனி வரும் நாட்களில் மாநிலத்துக்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால் கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 219 டன் ஆக்சிஜனையும் தங்கள் மாநிலத்துக்கே உபயோகிக்க அனுமதிக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…