மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் உடன் கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் கொரோனாவை எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதனைத்தொடர்ந்து ஆக்சிஜன் தேவை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். ஆக்சிஜன் உபயோகத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை ஒவ்வொரு மாநிலங்களும் தவறான முறையில் பயன்படுத்தப்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த ஒரு மாநிலத்திற்கும் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதை உதவி செய்ய உறுதி செய்ய வேண்டும். மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை வழங்க, உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு மருத்துவமனைகளுக்கும் தேவைக்கேற்ப ஆக்சிஜனை உடனடியாக வழங்க முடியும் என்பதனை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் பயண நேரத்தை குறைப்பதற்காக தான் ரயில்வே ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் திரும்பும் பயண நேரத்தை குறைப்பதற்காக வெற்று ஆக்சிஜன் டேங்கர்களை கொண்டு செல்ல விமானத்தை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…