PM Modi [Image source : ANI]
நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என பிரதமர் பேச்சு.
கோவாவில் நடைபெற்ற ஜி20 எரிசக்தி துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர், பசுமை வளர்ச்சி மற்றும் ஆற்றல் மாற்றத்தில் இந்தியா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடு மற்றும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் நாடாகும்.
நாம் நமது காலநிலை உறுதிப்பாட்டில் வலுவாக முன்னேறி வருகிறோம். நாம் மின் திறன் இலக்கை 9 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துள்ளோம். நாங்கள் இப்போது அதிக இலக்கை நிர்ணயித்துள்ளோம். 2030-ஆம் ஆண்டுக்குள் 50% திறனை அடைய திட்டமிட்டுள்ளோம். சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தில் உலகளவில் இந்தியாவும் உள்ளது.
இந்தியாவில், கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கியுள்ளோம். நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள ஒவ்வொரு கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டுபோய் சேர்த்துள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான வளர்ச்சியே மத்திய அரசின் கொள்கை.
2015 ஆம் ஆண்டில், எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தைத் தொடங்கினோம். இது உலகின் மிகப்பெரிய எல்இடி விநியோகத் திட்டமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் 45 பில்லியன் யூனிட்டுகளுக்கும் அதிகமான எரிசக்தியைச் சேமிக்கிறது. மேலும், நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை கிடைத்திட நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன என தெரிவித்தார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…